என்னமோ சொல்லுறாங்க பொட்டம்மான்….. விநாயகம்….. கோதபாயா…. என்று

காணாமற்போயிருந்ததாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் விநாயகத்தின் குடும்பம் எப்படி யாழ்ப்பாணத்திற்கு வந்தது விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில் முக்கிய பங்காற்றி வந்தவர் விநாயகம். புலிகள் பலமுற்றிருந்த காலத்தில் தலைமையின் பணிப்பில் கிளிநொச்சியில் இருந்து இயங்கிய இந்த விநாயகம், அப்போது கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு முக்கிய பொறுப்பு வகித்திருந்தார். விடுதலைப்புலிகளால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நகர்வுகளுக்கான ஆளனிகளுக்கு பயிற்சிகளை வழங்கும் பொறுப்புக்கள் இவருக்கு தலைமையினால் வழங்கப்பட்டிருந்தது.

பொட்டம்மானுடைய நேரடி கண்காணிப்பில் கபிலம்மான்,மாதவன் மாஸ்ரர்,கேணல் சாள்ஸ் ஆகாயோரின் கட்டளைகளுக்கு அமைவாக கொழும்பிலிருந்து இயங்கிய இந்த விநாயகம் அப்போதைய காலகட்டத்தில் தெற்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு தேவையானவர்களை தயார் செய்யும் பணிகளை மேற்கொண்டார். இருந்தும் விடுதலைப்புலிகளின் புலனாய்வு கட்டமைப்பினால் தாக்குதல் இலக்குகள் தொடர்பாக எந்த தகவல்களும் இவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதில்லை. இருந்தும் யுத்தம் உக்கிரமடைந்த காலத்தில் விநாயகம் விடுதவைப்புலிகளின் தொடர்புகைளிலிருந்து அப்பாற்சென்றிருந்தார். அவருடைய தொடர்புகள் விடுதலைப்புலிகளுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னணியில் நடைபெற்றவை தொடர்பாக… யுத்தத்தின் ஓரிரு இறுதி நாட்களில் குறித்த விநாயகம் இலங்கை இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடைய பின்னணி தொடர்பாக ஆராய்ந்த அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது துருப்புச்சீட்டாக இவரை பயன்படுத்தத திட்டம் தீட்டினார். யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னர் விநாயகத்தினுடைய குடும்பமும் வன்னியில் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தது. இதை பயன்படுத்திய கோத்தபாய விநாயகத்தினுடைய குடும்பத்தினரை பணயக்கைதிகளாக்கி விநாயகத்தை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். கோத்தபாயவின் பணிப்பில் விநாயகத்தின் குடும்பம் இரகசியமான முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டது

கோத்தபாயவின் பணிப்பில் பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற விநாயகம் அங்கு பலமுற்றிருந்த விடுதலைப்புலிகளின் கட்டமைப்பை சிதைப்பதற்கான பணிகளை முன்னெடுத்தார். அதில் குறிப்பாக பிரான்சின் முக்கிய தளபதியாகவிருந்த கேணல் பருதி படுகொலை செய்யப்பட்டதற்கு இந்த விநாயகமே முக்கிய காரணம். இந்நிலையில் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்பட்டது. புதிதாக ஆட்சிக்கு வந்த அரசின் பாதுகாப்பு அமைச்சிற்கு இந்த விடயம் தெரிவந்திருந்தும் இந்த அரசும் இது தொடர்பில் அமைதியாக இருந்து வந்தது. எனினும் தற்போதைய அரசு தன்னுடைய நல்லெண்ணத்தை காட்டும் நோக்கில் விநாயகத்தின் குடும்பத்தை கட்சிதமாக விடுவிக்க நினைத்து விடுவித்துள்ளது.

(வன்னி நிலம்)