(தி.டிலக்சன், யாழ். பல்கலைக்கழகம்)
மனித வரலாற்றின் இருண்ட பக்கங்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரங்களும் காலத்தால் அழியாத வலிகளும் புதைந்து கிடக்கின்றன. அந்தப் பக்கங்களில் ஒன்று தான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி என்ற நிலப்பரப்பு.