தேர்தல் முடிவுகளால் திருத்தம் காணுமா காங்கிரஸின் அணுகுமுறை?

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவியுள்ளது காங்கிரஸ் கட்சி. ஆளுங்கட்சியாக இருந்த பஞ்சாபை ஆம் ஆத்மியிடம் இழந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் ஏற்கெனவே செல்வாக்கை இழந்துவிட்ட நிலையில், உத்தராகண்டில் பாஜகவுக்குக் கடும் போட்டியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கூடப் பொய்த்துவிட்டது.