இலங்கைக்கு டொலர்களை ஈட்டித் தரும் முக்கிய ஏற்றுமதித் தொழில்களில் ஒன்றான ஆடைத் தொழில் நெருக்கடியில் உள்ளது. சில தொழிற்சாலைகள் பகுதியளவில் மூடப்படுகின்றன. ஒருசில ஆடைத்தொழிற்சாலைகள் முழுமையாக மூடப்படுகின்றன. இதனால், அங்கு பணியாற்றிய பலரும் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.