இளம் வயதினரை வெகுவாக பாதிக்கும் ‘பெமோ’ மன நோய்

அழும் குழந்தை முதல், வயோதிபர்கள் வரையிலும் ஒவ்வொருடைய கைகளிலும் அலைபேசிகள் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. உலகம் ஒரு விரல் நுனியில் சுருங்கி விட்டது எனலாம். வீட்டில் இருக்கும் உறவுகள், வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் கூட, நேரத்தை ஒதுக்கிக் கதைப்பதற்கான நேரத்தையும் அலைபேசி அபகரித்து விட்டது.