சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தல் குற்றவியல் குற்றமாகும்

16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல், பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை 2025.07.01ஆம் திகதி தொடக்கம் முழுமையாகத் தடைசெய்வதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தலைமையில், செவ்வாய்க்கிழமை (24) அன்று கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.