செல்வச்சந்நிதி அசாதாரணமான கோயில்

(பேராசிரியர் கா. சிவத்தம்பி)


தொண்டைமானாற்றிலுள்ள ‘செல்வச்சந்நிதி’ எனும் தலம் அதற்குரிய பக்திக் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் பொழுது அதிகம் ஆராயப்படாத ஒரு தலமாகவேயுள்ளது. இலங்கையின் சைவக்கோயில்கள் பற்றிய முக்கிய ஆராய்ச்சிகள் சமூக அதிகாரமுடை யோரின் கோயில்களையே பெரிதும் சுற்றி நின்றுள்ளன. இது மனித இயல்பின் பால்பட்டதே.