திமிங்கிலங்களின் சண்டையில் சின்ன மீன்கள்

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் – 06

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சீனாவில் ஆட்சிமாற்றத்தை அமெரிக்க அயலுறவுக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருபகுதியினர் விரும்புகிறார்கள். இன்னொரு பகுதியினர், ஆட்சிமாற்றத்தை விட, சீனா செல்வாக்குச் செலுத்தும் நாடுகளில், அமெரிக்கச் செல்வாக்கை அதிகரிப்பதன் ஊடு, சீனாவை ஓரங்கட்ட வேண்டும் என்று வாதிடுகிறார்கள்.