புத்தமதமும் – டாக்டர் அம்பேத்கரும்

இளம் பருவத்திலிருந்தே புத்தர் வாழ்க்கைச் சரித்திரத்தையும், புத்த தருமத்தையும் பற்றிக் கசடறக் கற்கத் தொடங்கினார் அம்பேத்கர். 1954இல் பர்மாவில், இரங்கூன் மாநகரில் உலக புத்தர் மாநாடு கூடிற்று. டாக்டர் அம்பேத்கர் அம்மாநாட்டில் கலந்து கொண்டார். புத்தர் மதச் சடங்குகளை வெறுத்தவர்.