மரநடுகை மாதம் பகுதி 2


9 எனது அவதானத்தின்படி பொது வெளிகளில் மரம் நடுவோர் 6 அங்குலத்திற்கும் குறைவான மரங்களையே நடுகின்றனர் .இவை ஆழவேரூன்றி வளரும் என்றாலும் ;இவற்றில் அநேகமானவை கால்நடைகளால் உண்ணப்பட்டு விடுகின்றன .
இவற்றுக்கு காப்புக்கூடு அமைக்கும் செலவு அதிகமானது .
கூடு அமைத்தாலும் விஷமிகளாலும் கள்வர்களாலும் இக்கூடுகள் காணாமல் ஆக்கப்படுகின்றன .
மொத்தத்தில் அடைவுமட்டம் குறைகிறது .
10 இவற்றை தவிர்ப்பதற்கு நான் 6 அடி(2m) உயரமான மரங்களை பொது வெளிகளில் நட சிபாரிசு செய்கிறேன் .
இவற்றுக்கு காப்புக் கூடு தேவையில்லை .
பலமான இரண்டு மரக்கம்புகள்; நடப்படும் மரத்தின் இரு பக்கங்களிலும் நடப்பட்டு ; இவற்றுடன் நடப்படும் மரம் தும்பு கயிற்றால் அல்லது சணல் கயிற்றால் பிணைக்கப்படும் .
(நைலான் கயிறு பாவித்தல் , மரம் பெருக்கும்போது இக்கயிறு மரத்தை குறுக்காக வெடிக்கொண்டு உள்நுழையும் )
11 வீதியோர மரநடுகையாயின் ஒவ்வோர் மரத்துக்கும் இடையில் குறைந்தது 20 அடி(7m) இடைவெளி இருக்கவேண்டும் .
12 நடுகைக்குழி 2×2×2 பரிமாணத்தில் இருக்கவேண்டும் .
13 நடுகைக்குழியில் ஒரு கடகம் நன்கு உக்கிய மாட்டெரு அல்லது நன்கு உக்கிய கூட்டெரு இடுவது சிறப்பானது
14 நன்கு உக்காத எருவை இடும்போது , அது உக்கும்போது வெளியிடப்படும் வெப்பம் வேர்களை இறக்கச் செய்துவிடும்
15 வேர்வளர்ச்சியை தூண்டுவதற்காக ஒவ்வோர் குழியிலும் ஓர் மேசைக்கரண்டி சூப்பர்பொஸ்பேற் இரசாயன உரம் இடுதல் சிறப்பானது
16 நடமுன்பு மரங்களின் பக்க கிளைகள் அகற்றப்பட்டு ,ஆவியுயிர்ப்பை கட்டுப்படுத்த தேவையற்ற இலைகள் அகற்றப்பட்டு , நுனிப்பகுதியில் மட்டும் 8தொடக்கம் 10 இலைகள் விடப்படவேண்டும் . இவையும் அரைவாசி வெட்டப்படல் சிறப்பானது .
17 நடுகைக்குளியின் மையத்தில் கன்று நடப்பட்டு , பக்கவாட்டுக் கம்புகளும் நடப்பட்டு வேர்கள் தெரியாதபடி , குழி மண்ணால் இறுக்கமாக மூடப்படவேண்டும்
18 குழியை மூடியபின் மரத்தைச் சுற்றி வட்டமாக ஓர் பாத்தி அமைக்கப்பட வேண்டும்

மிகுதி நாளை