மரம் நடுகை மாதம் பகுதி 5

(வடகோவை வரதராஜன்)

நேற்றைய தொடர்ச்சி

36 வீட்டில் நடக்கூடிய மரங்கள்
மா , பலா , ஈரப்பலா , தோடை ,எலும்பிச்சை , அரிநெல்லி , கொய்யா , யம்பு , மாதுளை , அவகோடா , சீமைஇலுப்பை , தென்னை , மரமுந்திரி , அன்னமுன்னா —
37 இப்போ அநேகமானோர் உயிர் வேலிகளை அகற்றி தகர வேலிகளை அமைத்து வருகிறார்கள் . இதில் பட்டுத்தெறிக்கும் வெயில் , வளவையும் வீட்டையும் மிகுந்த உஷ்ணமாக்கிறது.
சீமெந்து மதில்கள் , தகரவேலிகள் என்பனவற்றை விட உயிர்வேலிகளே நமது வீடுகளை மிகவும் பாதுகாக்கிறது .
உயிர்வேலிகளை ஏறிக்குதித்து நமது வளவுக்குள் திருடர்கள் நுழைய முடியாது .
நீங்கள் தகர வேலிகள் அமைந்திருந்தாலும் கீழ்வரும் மரங்களை தகரவேலிக்கிடையில் நட்டால் சூழல் குளிர்ச்சியாவதோடு வீடும் பாதுகாக்கப்படுகிறது.உகந்த மரங்கள்
கிளிசீரிடியா , பூவரசு , அகத்தி , இப்பில் இப்பில் , வாதநாராயணி.
38 பொது வெளிகளில் புளி, வேம்பு இலுப்பை புன்னை ஆகியவற்றை அதிகம் நாட்டுவது சிறப்பானது .
இன்று வளவுகளில் உள்ள அநேக புளிய மரங்கள் மூடக்கொள்கை காரணமாக தறிக்கப்பட்ட காரணத்தால் இன்று புளி உச்சவிலையைத் தொட்டு நிற்கிறது.
நெடும் சாலைகளிலும் பொது இடங்களிலும் புளியை நாட்டினால் சட்டத்துக்கு பயந்து யாரும் தறிக்க மாட்டார்கள் .
தமிழகத்தில் ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது , நெடும்சாலையோரம் எல்லாம் புளியை நட்டாராம் . அப்போது அநேகர் அவரை கேலி செய்தார்களாம் .
இன்று தமிழ்நாட்டுக்கு அதிக வருமானம் பெற்றுத்தருபவை அந்த சாலையோர புளியமரங்களே .
39 ஏன் எண்ணெய்வித்துப் பயிர்கள் அதிகம் நடவேண்டும் ?
இன்று பாம்ஒயிலின் பாவனை குறைந்து உலகளாவிய ரீதியில் தேங்காய் எண்ணெயின் பாவனை அதிகரித்து வருகிறது .
சவர்க்காரம் செய்யப்பயன்படும் மூலப்பொருள்களில் முக்கியமானது தேங்காய் எண்ணையும் விலங்கு கொழுப்புமாகும் . தேங்காய் எண்ணெயின் உச்சவிலை சவர்க்கார உற்பத்தியாளர்களை வேறு தாவரஎண்ணைகளை நாடவைக்கும் . இதனால் வேப்பெண்ணெய் , இலுப்பெண்ணை, புன்னைஎண்ணெய் , ரப்பர்வித்து எண்ணெய் என்பவற்றிற்கு அதிக சந்தைமானம் கிடைக்கும் . இப்பொழுதே வேப்பெண்ணெய் போத்தல் 1000 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது . சுவிஸில் இலுப்பெண்ணை இங்கத்தைய பெறுமதியில் அங்கு 9000 ரூபாவிற்கு விற்கப்படுவதாக Inuvaijur Mayuran குறிப்பிடுகிறார் . எனவே நெடும் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் அதிகளவு புளி ,வேம்பு , இலுப்பை ,புன்னை ஆகிய மரங்களை அதிகளவில் நடுவோம் .

40 கீழுள்ள படம் எனது மகள் பிறந்தபோது எமது ஆலய வீதியில் என்னால் நடப்ட்டட இலுப்பைமரம் .இன்று இதன் விதைகளில் இருந்து பெறப்படட இலுப்பெண்ணையில் இருந்தே கோவில் விளக்குகள் எரிக்கப்படுகின்றன .
இம்மரம் மகளை , இம்முறை ஊவாவெல்ல பல்கலைக்கழகத்திற்கு Mineral resource and management கற்கை நெறிக்கு அனுப்பிவைக்கிறது.