யாரும்
தீவு தான்

லைடன் தீவு (வேலணைத்தீவு)
புங்குடுதீவு
நயினாதீவு (மணிபல்லவம்/ மணிபல்லவத் தீவு)
காரைநகர்
நெடுந்தீவு
அனலைதீவு
எழுவைதீவு
என்னும் ஏழு தீவுகள் தான் அந்த சப்த தீவுகள் ஆகும் .

இவற்றுள் லைடன் தீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை கடல்வழிச் சாலைகள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கப்படுள்ளன. ஏனைய நான்கு தீவுகளான எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு என்பவற்றுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பு மட்டுமே உண்டு. இவை தவிர யாழ் குடாநாட்டை அண்டியுள்ள சில மனிதர் வாழாத தீவுகளும், கச்சதீவும் இதற்குள் அடங்குவதில்லை.

முன்னர் ஏழாக இருந்து பின்னர் பல தனித் தீவுகளாகப் பிரிந்து பல தீவுகள் காணப்படுகின்றன.
மண்டைதீவு பிரிந்து தான் தற்பொழுது இருக்கிறது
யாழ் குடாவில் காணப்படும் பிற தீவுகள் பின்வருமாறு:

சிறு தீவு
குருசடித்தீவு
கண்ணன் தீவு
காரைதீவு (வேலணை)
குறிகட்டுவான்
நடுத்துருட்டி
பாலை தீவு
பாறை தீவு
புளியந்தீவு
தொரட்டப்பிட்டி
காக்காரத்தீவு

தீவுகளில் மக்களின் ஆரம்ப குடியேற்றம், வாழ்வு முறை, ஆட்சி முறைகள் பற்றிய வரலாற்று தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இடப் பெயர்களை வைத்து நோக்குகையில் இலங்கை மீதான தென் இந்திய கடல் படையெடுப்புகளில் இத்தீவுகளில் படைகளை அல்லது தனைகளை தங்க வைத்திருக்கலாம் என்று தெரிகின்றது. மேலும் ஊர்காவற்துறை போன்ற துறைகளும் முக்கியத்துவம் பெற்று விளங்கின. மேலும், தீவு மக்களின் உணவு, மொழி போன்ற சில அம்சங்கள் கேரள மலையாள மக்களுடன் ஒப்பிடத்தக்கவை.உணவு உடை பண்பாடு பெரும்பாலும் மல யாளிகளை நினைவூட்டும்/

போர்த்துகேயர் (1505–1658), ஒல்லாந்தர் (1656–1796) ஆகியோரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ குருமார்கள் வந்து போதித்து பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள்.

யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலை அடுக்கமைவே இங்கும் நிலவியது. குறிப்பாக “குடிமைகள்” என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்டோர், வயல்களிலிலும், மேற் சாதி வீடுகளிலும் கூலி வேலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு சுரண்டப்பட்டனர். மேலும், சம ஆசனம், சம போசனம் மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இவர்களை தவிர, மீனவ சமூகமும் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினராகவே வாழ்ந்தனர். தற்போது, இச் சாதி கட்டமைப்பு தீவு பகுதிகளில் மிதமாக இடம்பெற்ற கிறீஸ்தவ மத மாற்றம், பின்னர் ஏற்பட்ட புலப் பெயர்வு காரணமாக மிகவும் வலுவற்று பலமிழந்து இருக்கின்றது.

விவசாயம், மீன்பிடி, வியாபாரம் ஆகிய மூன்று துறைகளுமே தீவுகளின் பொருளாதார அடிப்படை. நில வளம், நீர் வளம் விவசாயத்துக்கு அவ்வளவு ஒத்துழைக்காவிடினும் நெல், தோட்ட செய்கை, மற்றும் வியாபாரப் பயிரான புகையிலை செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது. இத் தீவுகளின் புவியியல் சூழல் மீன்பிடித்தலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றது. தீவக மக்கள் கொழும்பு, தென் இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் வியாபாரத் தொடர்புகளை பேணியும், வியாபார தாபனங்களை உருவாக்கியும் பொருள் ஈட்டுவதில் ஈடுபட்டு வந்தனர்
தீவுகளிலும் யாழிலும் உற்பத்தியாகும் பல பொருட்களை இவ் வியாபரிகளே பல பிரதேசங்களிலும் சந்தைப்படுத்துகின்றார்கள்.
இலங்கையின் வட மாகாணத்துக்கு உள்ளேயும் கிளிநொச்சி மற்றும் வன்னிப் பகுதிகளில் விவசாயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது அங்கே இடம்பெயர்ந்து குடியேறியோரில் பெரும்பகுதியினர் தீவுப்பகுதிகளைச் சேர்ந்த மக்களே.

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பதற்கமைய ஈழப் போர் காலத்தில் தீவுப் பகுதி மக்கள் பெரும்பாலனவர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள். ஆரம்பத்திலேயே அவர்களுக்கு இருந்த வியாபார வெளி தொடர்புகள் இப் புலம் பெயர்வை உந்துவித்திருக்கலாம். பொரும்பாலான புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் சிதறி வாழுகின்றார்கள்.

யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலை அடுக்கமைவே இங்கும் நிலவியது. குறிப்பாக “குடிமைகள்” என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்டோர், வயல்களிலிலும், மேற் சாதி வீடுகளிலும் கூலி வேலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு சுரண்டப்பட்டனர். மேலும், சம ஆசனம், சம போசனம் மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இவர்களை தவிர, மீனவ சமூகமும் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினராகவே வாழ்ந்தனர். தற்போது, இச் சாதி கட்டமைப்பு தீவு பகுதிகளில் மிதமாக இடம்பெற்ற கிறீஸ்தவ மத மாற்றம், பின்னர் ஏற்பட்ட புலப் பெயர்வு காரணமாக மிகவும் வலுவற்று இருக்கின்றது.

யாழ் சமூகத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. யாழ் குடாநாடு போலின்றி தீவுகளில் கல்வி வசதி குறைவு, அதன் காரணமாக பலர் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

“வியாபாரத்தை பொறுத்தமட்டில், (இத்தகைய) கல்வி வசதிகள் பெருமளவில் கிடையாத தீவுப்பகுதியினரே பெரும்பாலும் வெளிப் பிரதேசங்களில் கடைகள் நிறுவினர். இன்றும் இந்நிலைமை ஓரளவு தொடர்ந்து நிலவுவதைக் காணலாம். காரைநகர், புங்குடு தீவு முதலிய தீவுகளை சேர்ந்தவர்கள் இத்துறையில் முன்னோடிகளாக விளங்கினார்”.
இத் தீவுகளில் இருந்து இடம் பெயர்ந்தோர் அத்தீவுகளின் சார்பாகவோ, அல்லது அத்தீவுகளில் உள்ள கிராமங்களின் சார்பாகவோ ஊர் ஒன்றியங்கள் அமைத்து அத் தீவுகளில் சமூக சேவை செய்து வருகின்றார்கள். ஆபத்து உதவிகள், வைத்திய உதவிகள், பாடசாலைகள் மீள் கட்டமைப்பு, சனசமூக நிலையங்கள் பராமரிப்பு, தொழில் வள உதவிகள், பொருள் சந்தைப்படுத்தல், ஏற்றுமதி உதவிகள், போக்குவரத்து மேம்படுத்தல், மின்சத்தி வழங்குதல், கணணி கல்வி ஊக்குவிப்பு, தொலை தொடர்பு மேம்படுத்தல், குழந்தைகள்-முதியோர்-நோய்வாய்பட்டோர் பராமரிப்பு, கோயில்கள் பராமரிப்பு மற்றும் விழா எடுத்தல் போன்ற பல சேவைகளில் ஈடுபட்டு அங்கிருக்கும் மக்களின் நலனில் அக்கறை காட்டி வருகின்றனர்.

நெடுந்தீவு இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை Delft என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது. நெடுந்தீவு தலைத் தீவு, பசுத்தீவு, பால்தீவு, அபிசேகத் தீவு, தயிர் தீவு முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இத்தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்களுடன் உள்ளது. 1813ம் ஆண்டு நெடுந்தீவு கடலில் இருந்து புறப்பட்ட ஹீர்த் டீ போலோ (hearth De Polo) எனும் ஐக்கிய அமெரிக்க இளைஞன் இத் தீவின் அழகையும் வளங்களையும் மனதில் கொண்டு இது தனி ஒரு நாட்டுக்கு சொந்தமானதல்ல இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது என்றானாம்.

இது யாழ்ப்பாணத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அத்துடன் இராமேஸ்வரத்தில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் புங்குடுதீவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. நெடுந்தீவின் சுற்றளவு 30 கிலோமீட்டர் ஆகவும், பரப்பளவு 48 சதுரகிலோமீட்டர் ஆகவும் காணப்படுகின்றது.

இங்கு ஆலங்கேணி, பெரியான்துறை, மாலவி துறை,பூமுனை, சாமி தோட்ட ,வெல்லை, குந்துவாடி, தீர்த்தகரை ஆகிய ஊர்கள் உண்டு. இங்குள்ள மக்கள் இந்தியாவுக்கு செல்ல பெரியத்துறை துறைமுகத்தினை பயன்படுத்துகின்றனர். மற்றும் மக்கள் படகுகளில் யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, புங்குடுதீவு ஆகிய இடங்களிற்கு பயணம் செய்யலாம். இதுதவிர இங்கு மாலசி துறை, கிழக்கு துறை, தாளை துறை, குடுவில்த்துறை, குவிந்தா துறை, வெலாத்துறை ஆகிய துறைமுகங்கள் காணப்படுகின்றது.

நெடுந்தீவில் கட்டை குதிரைகள். 1660 ஆம் ஆண்டுகளில் இருந்து
திறந்த வெளிகளில் காணப்படுகின்றன. இங்குள்ள குதிரைகளும் கோவேறு கழுதைகளும் 1660ம் ஆண்டு முதல் 1675ம் ஆண்டு வரை வடபகுதியின் ஒல்லாந்து அரசாங்கத்தின் ஆளுநராக இருந்த ரிஜிக் லொஸ்வேன் கொஹென்ஸ் இந்தத் தீவில் தங்கியிருந்த போது இந்த மிருகங்களைக் கப்பல்கள் மூலம் இத்தீவுக்கு கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்.

பிரித்தானியர் ஆட்சியில் 19 ஆம் நூற்றாண்டில் இவை நோலான் என்ற பிரித்தானியரால் முறையாக வளர்க்கப்பட்டன.இத்தீவிலிருந்து இக்குதிரைகளை வெளியே கொண்டு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் நெடுந்தீவில் வழக்கில் உள்ளது.

இதுதவிர இங்கு பெருக்க மரங்கள் காணப்படுகின்றன. இது பாலோபாப் என அழைக்கப்படுகின்றது. இம்மரம் கிழக்காபிரிக்க நாட்டிலிருந்து அரேபியர்களினால் 7ம் நூற்றாண்டுகளில் கொண்டு வரப்பட்டது.

போத்துக்கேயர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையான அன்னியர் ஆதிக்கத்திற்கு முன்னர் நெடுந்தீவு ஒரு சுதந்திர தனி இராசதானி நாடாகவே விளங்கியது. வெடியரசன் நெடுந்தீவின் மேற்குப்பகுதியில் கோட்டைக்காடு என்னுமிடத்தில் கோட்டை கட்டி அமைச்சர்கள், படைவீரர்களுடன் ஆட்சி புரிந்துள்ளான். வெடியரசனின் கோட்டை இன்றும் சிதைந்த நிலையில் கல்மேடாக நெடுந்தீவின் வடமேற்குக் கரையில் காணப்படுகிறது
இந்த வெடியரசன் கோட்டையை உங்களின் வாழ் நாளில் பார்க்காதவர்கள் இந்த உலகில் இருப்பதற்கு லாயக்கு அற்றவர்கள். அந்த நாளில் அப்படி ஒரு பலமான கோட்டை. ஒல்லாந்தர் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தாங்களும் கோட்டைகள் அமைத்துக் கொண்டனர் .

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் பெரியதுறையிலிருந்து எவரும் இந்தியாவிற்கு செல்லாதபடி தடைவிதிக்கப்பட்டிருந்தது.. இத்துறைமுகத்தை அண்டியே வெடியரசனுக்கும், மீகாமனுக்கு சண்டை நடந்ததாக வரலாறு கூறுகிறது.

இங்கிருந்து பூக்கள் மலர்கள்ஆலயங்களுக்கு தமிழ் நாட்டுக்கு எடுத்துசெல்ல ப்பட்டன .நெடுந்தீவில் ஆலங்கேணி
(இது திருக்கோணமலையில் இருப்பது அல்ல )
பெரியான்துறை
மாவலித்துறை
(‘மா’ என்ற சொல்லுக்கு குதிரை என்ற அர்த்தம் உள்ளது. எனவே குதிரைகள் ஏற்றி இறக்கியதனாலேயே மாவிலி என்ற பெயர் உண்டாயிற்று.

ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்த மாவிலித் துறைமுகத்தில் உள்ள வெளிச்ச வீடு மூன்று உருளைத் தூண்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக் கட்டப்பட்டது போல் அமைவு பெற்று அதன் மேல் கூம்பு வடிவமான ஓர் முடியும் காணப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வகையான வெளிச்ச வீடுகளும் கப்பல் திசை மாறாது செல்வதற்கு ஒவ்வொரு வகையான ஒளிச் சமிக்ஞைகளைக் கொண்டுள்ளது. இந்த வெளிச்ச வீடு 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது இரவில் தொடர்ந்து ஒளியை வீசிய வண்ணம் விளங்குகின்றது)
பூமுனை
சாமித்தோட்டமுனை
வெல்லை
குந்துவாடி
தீர்த்தக்கரை என்று ஊர்கள் உண்டு .ஒவ்வொரு ஊருக்கும் தனிக்கதைகள் உண்டு.
ஆனால் அவை யாவும் யுத்தத்தால் அழிந்து விட்டன .கர்ணபரம்பரை கதைகளை முதியவர்கள் மூலமே செவி வழியாகப் பரவின .ஆனால் ..வயோதிபர் மடங்கள் பெருகி இருப்பதும் பேர ப் பிள்ளைகளுக்கு கதைகள் சொல்லிக் கொடுக்க முடியாமலும் வரலாறுகள் அழிந்து கொண்டிருக்கின்றன.

நெடுந்தீவு இறங்கு துறையிலிருந்து கிழக்காக சுமார் 2.5 கிலோ மீற்றர் தூரத்தில் பெருக்கு மரம் காணப்படும். குருதிப்பெருக்கம்இ நரம்புத் தளர்ச்சிஇ அம்மைஇ இரத்த அழுத்தம்இ தொற்றுநோய் ஆகியவற்றுக்கு பெருக்கு மரமத்தின் இலைகள்இ பட்டைகள்இ வேர்கள் போன்றவை பயன்படுகின்றன. 300 வருடகாலம் பழைமையான இந்தப் பெருக்கு மரத்தைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை.

இந்தப் பெ ருக்கு மரம் அழிந்தால் இலங்கை அழிந்து விடும்
இக்கோட்டையை அண்மித்துள்ள பகுதிகளில் மட்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், வட்டமான நாணயங்கள், சதுரமான நாணயங்கள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கோட்டை கட்டப்படும் பொழுது பல சரித்திரங்கள் நடந்தன .அவை காலப்போக்கில் தருகிறேன்.

இங்கு 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு வருகின்றனர்.

இலங்கை பாராளுமன்றத்தின் முதல் சபாநாயர் நெடுந்தீவை சேர்ந்த சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி அவர்கள் என்பது ஊருக்கு சிறப்பு …
கி.மு 200 இல் வாழ்ந்ததாக அறியப்படும் ஈழத்தமிழ் மன்னர். விஷ்ணுபுத்திர வெடியரசன் என்றும் அழைக்கப்படும் இம் மன்னர் இலங்கையின் நெடுந்தீவு, காரைநகர் போன்ற இடங்களில் தன்வம்சத்தோடு ஆட்சி செய்துள்ளார். தற்காலத்திலும் இவனது வம்சத்தினர் யாழ்ப்பாணத்திலுள்ள காரைநகர், தொல்புரம், வட்டுக்கோட்டை, நவாலி, ஊர்காவற்துறை, மன்னார், பருத்தித்துறை, நெடுந்தீவு ஆகிய இடங்களிலும், பெரும்பாலானோர் மட்டக்களப்பிலும் வாழ்கின்றனர்.

இம் மன்னர் தனது ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய கோட்டை தற்பொழுதும் நெடுந்தீவில் காணப்படுவதோடு வெடியரசன் கோட்டை என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது. காரைநகரில் வெடியரசன் வீதி என்ற பெயரில் வீதியொன்றும் காணப்படுகின்றது. இம்மன்னருடைய வம்சாவழியினர் முக்குவர் என்ற சாதிப் பெயரால் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சமூகமாக இல்லாமல் இருக்கின்றனர்.
மெங்கும் அனலை தீவு காரைதீவு எழுவாய் தீவு பற்றி பின்னர் ஆராய்வோம்