வீடு என்பது வெறும் இடம் மட்டுமல்ல!- ஓவியர் மருது பேட்டி

வீடு திரும்புதல் எனும் நிகழ்ச்சியும், வீடு திரும்புதல் என்பதன் பொருளும் புராதன காலத்திலிருந்து எல்லாப் பண்பாடுகளிலும் மதிப்போடு பார்க்கப்படுகிறது. தேசத்தின் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு காலாட்படையினராகச் செயல்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், குறைந்தபட்ச ஆசுவாசத்துடன் ஊர் திரும்பும் கௌரவத்தைக்கூட இந்த நோய்த்தொற்றுக் காலத்தில் அளிக்கத் தவறிவிட்டோம்.