இலங்கை அரச பல்கலைக் கழகங்களில் பட்டதாரிகளை உருவாக்க அரசின் செலவினம்? இத்தனை கலைப் பட்டதாரிகள் நாட்டுக்கு தேவையா?

அதே நேரம் பட்டதாரிகளை உருவாக்க ஆண்டொன்றுக்கு
அதிகபட்சம் Dental – 17 இலட்சம்
Veterinary 15 இலட்சம்
Medicine= 10 இலட்சம்
Arts = 3.5 இலட்சம்
IT = 3.6 இலட்சம்
செலவாகிறது.
(மேலதிக விபரங்கள் படத்தில்)
இந்த அடிப்படையில் ஒரு (2021) Batchஇல் பட்டதாரிகளை உருவாக்க
Arts = 11,488 பேர் × 3 வருடங்கள் × 352475Rs = 12.2 Billion Rupees செலவாகிறது.
Medicine = 2168பேர் × 5 வருடங்கள் × 1010452Rs = 10.9 Billion Rupees
செலவாகிறது.
Again கலைப் பிரிவுக்கே அதிக நிதி பாவிக்கப்படுகிறது.
இலங்கையில் கல்விக்காக GDPயில் வெறும் 1.5%யே ஒதுக்கப்படுகிறது.
(2015இல் 2%ஆக இருந்தது, 2022இல் 1.5%ஆக குறைந்துள்ளது.)
வேலை வாய்ப்பை எடுத்துக் கொண்டால் (Graduate Employability Rate) அறிக்கையின்படி
Medicine – 100%
IT – 96.5%
Arts – வெறும் 28.5%
அந்த 28.5%உம் அரசு வலிந்து வழங்கும் ஆசிரிய மற்றும் Development Officer நியமனம்.
அதுவும் அரசுக்கு மேலதிக சுமை. பல பிரதேச செயலகங்களில் உட்காருவதற்கே இடமின்றியும், Job Discription என்னவென்றே தெரியாமலும் அல்லாடுகின்றனர்.
கலைத்துறை பட்டதாரிகள் அரச வேலைவாய்ப்பு தவிர்ந்து தனியார் துறைகளுக்கு செல்வதானால் தனது Degreeக்கு மேலதிகமாக Post Graduate studies, PhD முடிக்க வேண்டும்.
அன்றேல் Lateral Courses ஆக Psychology, HRM, IT ஏன் QS கூட செய்து தொழில்வாய்ப்பைத் தேட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். (விதிவிலக்குகள் இருக்கலாம்)
இவற்றை ஆரம்பத்திலே செய்வதற்கு வழிவகுத்திருந்தால் உச்சம் தொட கால அவகாசம் கிடைத்திருக்கும்.
கலை பிரிவு என்றால் என்னவென்று தெரியுமா? ஒரு நாட்டுக்கு அதன் முக்கியத்துவம் தெரியுமா? என்று பாடம் எடுக்க வர வேண்டாம். அது தெரியும். தெரியும். Gunஅ உள்ளவை.
இங்கே நான் சொல்ல வருவது நமது நாட்டுக்கு தேவையை விட மிக அதிகமான கலைப்பட்டதாரிகளுக்கான பல்கலைக்கழக இட ஒதுக்கீடும்,
நிதி ஒதுக்கீடும் நிகழ்கிறது.
2015இல் இருந்து இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.
96.5% Employability Rate கொண்ட IT துறைக்கு வெறும் 6% பல்கலைக்கழக இட ஒதுக்கீடு.
(2021இல் 2614பேர்)
ஒரு கலைப்பட்டதாரிக்கும், IT துறை பட்டதாரிக்குமான அரசின் செலவினம் ஒரே அளவானதே.
(ஆண்டொன்றுக்கு 3.5 இலட்சம்)
தகவல் தொழில்நுட்ப துறை (IT / ICT) 2022இல் இலங்கைக்கு 3வது ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித் தந்த துறை.
கிட்டத்தட்ட 1.2 Billion USD.
2025இல் 5 Billion வருமானத்தோடு ஏற்றுமதி வருமானத்தில் முதல் இடத்தை பிடிக்க Export Development Boardஆல் எதிர்பார்க்கப்படுகிறது.
2022 வரை ICTதுறையில் தொழில் வாய்ப்பை பெற்றோர் 300,000க்கு மேல். மேலும் 1000க்கு மேற்பட்ட startups நிறுவனங்கள்.
இதில் 500க்கு மேற்பட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளுடன் / வெளிநாட்டு Companyகளுடன் இணைந்து சேவைகளை வழங்குகின்றன.
இப்படி இருக்க IT துறையை பல்கலைக்கழகங்களில் கொண்டுவர இட ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசு அசமந்த போக்கையே காட்டுகிறது.
IT துறை Diploma, Degree களுக்காக தனியார் நிறுவனங்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.
அரச பல்கலைக்கழகங்களில் தெரிவாகி படித்தால் தான் மதிப்பு என்ற Mentality உள்ள சமூகத்தில் வாழ்ந்திருக்கும் நம் நாட்டில் IT துறைக்கான அரச பல்கலைக் கழக இட ஒதுக்கீட்டை பன்மடங்காக அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவை.
இது என்னடான்னா Artsக்குள்ள ITய ஒரு பாடமாக புகுத்தி அங்காலயும் இல்ல , இங்காலயும் இல்லாத ஒரு கறிக் குளம். 🤦‍♂️
ஏதோ ஒரு துறையில் படித்து பல்கலைக்கழகம் போய் Degree எடுத்து ஏதோ ஒரு அரசாங்க தொழிலை எடுத்து காலத்தை போக்கி Pensionஇல் வாழ்வை கழித்த காலம் மலை ஏறிவிட்டது.
மாறி வரும் உலகில் அதற்கு ஏற்ற தொழில் வாய்ப்புகளை பெற அதற்கு ஏற்றால் போல் நமது தகைமைகளையும், Skillsஐயும் வளர்த்துக் கொள்வோம்.
எத்துறை சென்றாலும்
Communication Skills
English
Basic IT
மூன்றும் மிக முக்கியம்.