தமிழ் மக்களின் 70 வருட அரசியல்

விசிலடிச்சியள்!

இப்போ
நகரசுத்தி, மலசலகூட சுத்திகரிப்புக்கு
தேர்தல் வைச்சாலும்…

ஈழம் கிடைக்கப் போற மாதிரி
உங்கட ஆள் வெல்ல வேணும் எண்டு
துள்ளிறியள்.

வடக்கும் கிழக்கும் இணைஞ்ச
மாகாணசபையில
தங்களுக்கு ஏகபிரதிநிதித்துவம்
கிடைக்கேலை எண்டு
குழப்பியடிச்சாங்கள்.

துள்ளி குதிச்சியள்.

அதே மாகாணசபை தேர்தலிலும்
ஆட்சி செய்ய லாயக்கு இல்லாட்டியும்
உங்கட ஆள் வந்தா
ஈழம் தான் எண்டிறியள்.

எம்.பிக்களை போட்டுத் தள்ளி
கூத்தடிக்கேக்கையும்
‘துரோகி ஒழிஞ்சான்’ தான்!

இப்பவும் பாராளுமன்ற தேர்தல் வைச்சா
உங்கட ஆள் தான்
தீர்வு பொதி சுமக்கிற கழுதை,
துரோகிகளுக்கு வோட்டு போட்டிடாதைங்கோ
எண்டிறியள்.

அண்ணை யதார்த்த வாதி எண்டதுக்காக
தேர்தலை பகிஸ்கரிச்ச நீங்கள்…

சரத் பொன்சேகாவுக்கு
வோட் போடாமல் விட்டதுமில்லை.

கூட்டமைப்பை உருவாக்கினதே
அண்ணை எண்டிற நீங்கள்…

அண்ணை கள்ள வோட்டு
போட்டு தான் வெல்ல வைச்சவர் எண்டு
கொதிக்கவும் இல்லை!

ஒருக்காலும்
தேசிக்காய் தலையருக்கு
புடிக்காத ஒண்டையும்
நாங்கள் செய்ய மாட்டம் எண்டோ,

எங்களுக்கு ஜனநாயக அரசியல்ல
நம்பிக்கையில்லை,
ஆயுத போராட்டம் தான் முடிவு என்றோ,

புலியள் செய்தது பிழைதான் எண்டோ
நீங்கள் சொன்னதில்லை.

உந்த படுகொலை அரசியல் பிழை,
உதாலை தான் எங்கட இனம்
நாசமா போச்சு எண்டு
நாங்கள் சொல்லேக்கை மட்டும்…

ஜனநாயகத்துக்கும் உங்களுக்கும்
ஏதோ பூர்வஜென்ம பந்தம் மாதிரி…

என்ன சிகைக்கடா
‘புனிதப் போராளியள்’ எண்டு
கிளப்பிக்கொண்டு வாறியள்?

முள்ளிவாய்க்காலோட
நாக்கை பிடுங்கி கொண்டு
அவற்ரை கூண்டிலயே
கைலாயம் போயிருக்கலாமே?