வீட்டுத்தோட்டத் திட்டத்தால் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள முடியுமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலங்கையில் மிக விரைவில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படப் போவதாக, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பலர் கூறுகிறார்கள். கடந்த வருடம், இரசாயன பசளை இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடையின் காரணமாக, உள்நாட்டு உணவு உற்பத்தி வெகுவாகப் பாதித்தமையும் நாடு எதிர்நோக்கியிருக்கும் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையின் காரணமாக உணவு இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதுமே, இந்த அச்சத்துக்கு காரணங்களாகும்.