1983 ஒரு (ஆண்)தலைமுறையின் பாய்ச்சலுக்கான வெற்றி என்றால் 2025 வெற்றியும் ஒரு (பெண்)தலைமுறையிற்கான வெற்றிதான்.
அரை இறுதி ஆட்டத்தில், 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியாவின் மகளிர் அணியை இந்திய மகளிர் அணி சில தினங்களுக்கு முன்பு வென்றது.
அதுவும் 338 என்ற அவுஸ்திரேலியாவின் அதி உயர் ஓட்டத்தை துரத்தி வென்ற போதே இந்தியாவின் அணி மீது மக்களுக்கு… அணியினருக்கு நம்பிக்கை எகிறி விட்டது. இம்முறை இறுதிப் போட்டியில் அது நடைபெற முன்பே இந்தியா வென்றுவிட்டதாக உணர்வை ஏற்படுத்திவிட்டது.
அப்படி ஒரு ஆட்டம் அந்த அரை இறுதி ஆட்டம்.
எனவே இறுதி போட்டியில் இந்தியா வென்றாலும் வெல்;லாவிட்டாலும் இந்தியா தான் சாம்பியன் என்ற உணர்வு பலர் மத்தியிலும் நடாந்து முடிந்த அந்த அரை இறுதி ஆட்டத்தின் அபாரம் ஏற்படுத்தி விட்டது.
இந் நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவிற்கு எதிராக 300 ஓட்டங்களுக்கு(298 ஓட்டங்கள்) அண்மையான ஓட்டங்களை இந்தியா குவித்த போதே யாராலும் இந்தியாவின் இன்றைய இறுதிப் போட்டி வெற்றியை தடுத்த நிறுத்த முடியாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.
ஆனால் கிரிக்கற் ஆட்டத்தில் எந்த ஓட்டத்தையும் துரத்தி பிடித்து வெல்ல முடியும் என்பதாக சில தடவைகள் நிரூபித்திருக்கும் நிலையில் தென் ஆபிரிக்க வெற்றி இலக்கான 299 துரத்துவதற்கான ஆட்டத்தை தொடர்ந்தது.
கடந்த ஆட்டங்களில் இந்தியாவின் துடுப்பாட்டங்கள் சிறப்பாக இருந்தாலும் களத்தடுப்பு அவ்வளவு சிறப்பாக இல்லாது இருந்தமையினால் இன்றும் அவ்வாறு நடைபெற்றுவிடலாமோ…? என்ற பதட்டம் இருந்து கொண்ட இருந்தது.
இந்த சூழலில் அவ்வாறு நடைபெறாத வகையில் இந்திய மகளிர் அணி தமது களப்பணியை மிகச் சிறப்பாக செய்தார்கள்.
இந்திய இணியின் களப்பணி சிறப்பாக இருந்தது என்பதற்கு அவர்கள் செய்த இரண்டு ஓட்ட ஆட்ட இழப்பு சான்றாகவும் அமைந்தன.
இதற்கும் அப்பால் துடுப்பாட்டத்தில் விக்கற்றை வீழ்த்திய அந்த இந்தி அணியின் அபாரமான பந்து வீச்சுதான் இந்த வெற்றிக்கு மகுடம் சூட்டியதாக உணர முடிந்து.
தனது துடுப்பாட்டத்தாலும் பந்து வீச்சில் அதிக விக்கெற்றுகளை சாய்ததும் இங்கு முக்கியம் பெறுகின்றது. அதனை காயம் உற்றவருக்கு பிரதியீடாக வந்த தீப்தி சர்மா இன் ஆட்டம் அபாரமானது.
இதற்கு அப்பால் ஒவ்வொரு வீராங்களையும் தம்மளவில் ஆட்டம் ஓட்டம் என்றாக மிகச் சிறப்பாக ஆடினார்கள்.
தென் ஆபிரிக்காவும் தம் அளவிற்கு மிகச் சிறப்பாக ஆடினார்கள் களத் தடுப்பில் பிடிகளை கோட்டை விட்ட சில தவறுகள் அவர்களின் தோல்வியிற்கு காரணமாக அமைந்தன.
முதன் முறையாக ஆண்கள் கிரிக்கற் போட்டியிற்கு இருக்கும் அதே மவுசுடன் இந்த உலகக் கோப்பை அதிலும் சிறப்பாக அரை இறுதி, இறுதி ஆட்டங்கள் அமைந்தது மிகச் சிறப்பு.
மைதானம் நிரம்பிய கூட்டமும் எம்மைப் போன்ற பலரும் தொலைக் காட்சியிற்கு முன்னால் நேரத்திற்கே நித்திரையால் எழுந்து பார்க்க வைத்த எதிர்பார்ப்புகள்.
இந்த வெற்றிகள் இன்னொரு செய்தியை சொல்லியும் இருக்கின்றது மற்றை எந்த நாடு வெற்றி பெற்றிருந்தாலும் இந்த அளவிற்கு 140 கோடி அளவிற்கு பெரும் தொகையான மக்கள் கொண்டாடும் நிலமை ஏற்பட்டிருக்காது…? அந்த நாடுகளின் சனத் தொகை அவ்வாறானது.
ஆனால் இந்தியாவின் சனத் தொகை 140 இற்கு மேலாக இருப்பதினால் இனி மேல் பெண்கள் கிரிகற்றும் ஆண்கள் கிரிக்கற் போல் அதிக ஈர்ப்பு விளம்பரம் தற்போது கிடைத்துள்ளது.
இதனால் உலக பெண்கள் அணிகளுக்கான பிரபலயம் அதிகரித்து அவையும் அதிகம் கொண்டாடப்படப் போகின்றது. இது ஒரு வகையில் பெண்களுக்கு விளையாட்டில் கிடைக்கும் சமூக அங்கீரகாரத்தை அதிகரிகவும் செய்யும்.
வாழ்த்துகள் எங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஆண்களின் வெற்றியை விட எமது தாயுள்ளங்களின் வெற்றி எம்மை அதிகம் நெகிழ்வுடன் கொண்டாத்தான் வைக்கின்றது.
1983 இல் கபில் தேவ் தலமையிலான ஆண்கள் கிரிக்கற் குழு உலகக் கோப்பையை(அப்போது 60 ஓவர்கள்) முதல் தடவை வென்றது. ஆ பாரிய ஊக்கத்தை இந்திய அணியிற்குள் ஏற்படுத்தியது அது போல் இம்முறை மகளிர் அணியின் வெற்றி(50 ஓவர்கள்) பெரிய தாக்கத்தை இந்திய மகளிர் கிரிக்கற் இல் ஏற்படுத்தும்.
இந்தியஅணி ஒரு (விளையாட்டு)போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் அது எதிர் அணிக்கு எதிராக மட்டும் அல்ல சமூகத்தில் நிலவும் ஆண் மேலாதிகம் என்று இருதரப்பிற்கும் எதிராக போராட வேண்டும்.
அதனால்தான் இந்த வெற்றி எனக்கு மிகவும் கொண்டாட்டமானதாகவும் பதியப்பட வேண்டும் என்பதான உணர்வுகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
1983 ல் ஹர்யானா கபில் தேவ் வென்றது ‘His’tory என்றால் 2025 ல் பஞ்சாப் ஹர்மன்ப்ரீத் கவுர் வென்றது ‘Her’tory
(கடைசி வரிகளுக்கான சொல்லாடல் உபயம்… பாஸ்கி என்ற கிரிக்கற் விமர்சகர்)