லெனின் ஏன் நமக்கு என்றும் தேவைப்படுகிறார்?

பாரதியால் ‘ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி/ கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!’ என்று புகழப்பட்டது ரஷ்யப் புரட்சி. அந்தப் புரட்சியின் தலைவர் லெனின். ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்த மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவங்களை நடைமுறைப்படுத்தியவர் லெனின்.