கதிர்காமத்தில் இருந்து குருநாகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டி எல்ல, பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை 4.30 மணியளவில், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில், ஆண்கள் 16 பேரும் பெண்கள் அறுவருமாக 22 பேர் மரணித்துள்ளனர். இந்த சம்பவம் முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.