அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து; சோகத்தில் மக்கள்

இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதி தென் கிழக்கு பங்கலாதேஷில் உள்ள ரோஹிங்கிய அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நூற்றுக்கணக்கான மூங்கில்களால் ஆன வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காக்ஸ் பஜாரின் 16-ஆவது முகாமிலேயே இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தீவிபத்தினால் சுமார் 5000 அகதிகள் வீடுகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் இத்தீவிபத்தில் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.