அதிருப்தியாளர்களுடன் சோனியா காந்தி சந்திப்பு

கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவர்களை சோனியா காந்தி நேரில் சந்தித்துப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த சந்திப்பின்போது கட்சி விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.மேலும், சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்திக்க சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார்.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தை எதிர்வரும் ஜனவரியில் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து சோனியா காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார்.

இக்கூட்டத்தில் சோனியா காந்திக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத், ஆனந்த் சா்மா, முகுல் வாஸ்னிக், கபில் சிபல், வீரப்ப மொய்லி, மணீஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.