அனுர- மோடியால் பெரும் பதற்றம்

“அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மரண பொறியை எதிர்ப்போம்” என்று எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்க மஹரகம நகரில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை பொலிஸார், வெள்ளிக்கிழமை (15) அகற்றிய போது  ஒரு சூடான சூழ்நிலை ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே   வாக்குவாதம் ஏற்பட்டது.