சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபரை ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற பெயரில் சட்டவிரோதமாக விடுவித்ததற்காக அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் மோகன் கருணாரத்னவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய புதன்கிழமை (11) உத்தரவிட்டார்.