சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் சீன மாணவர்களுக்கான விசாக்களை இரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறைகளை இன்னும் கடினமாக்க பரிசீலனை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மீது கெடுபிடிகளை அதிகரித்து வரக்கூடிய சூழலில், தற்போது சீன மாணவர்களுக்கான நெருக்கடி அதிகரித்துள்ளது.