அமைதியின்மையை அடக்க இராணுவத்தை தரையிறக்கிய துனீஷியா

இச்சமூக அமைதியின்மையின்போது பல்வேறு நகரங்களில் இளைஞர்களால் வன்முறையான போராட்டங்கள் நடாத்தப்பட்டிருந்தன. பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோரை விடுவிக்க வலியுறுத்தி வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இறங்கிய நிலையிலேயே இவ்வாறான வன்முறையான போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

மோசமான நிலையிலிருக்கும் பொருளாதாரம், அரச சேவைகள் குறித்து துனீஷியர்கள் கோபமாக இருக்கின்றனர்.அமைதியின்மை ஆரம்பித்ததிலிருந்து ஏறத்தாழ 1,000 கைதுகளை அதிகாரிகள் மேற்கொண்டதாக உள்நாட்டமைச்சு தெரிவித்துள்ளது.