‘அரசியல் கைதிகளின் விடுதலைக்கு கோட்டாபய ராஜபக்‌ஷ உறுதி’

வன்னி மக்கள் சார்பாக, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்ட 20 அம்சக் கோரிக்கைகள் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக, பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் உடனடியாக முன்னெடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதையடுத்தே, கோட்டாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்தோம் எனத் தெரிவித்தார்.