’அஸார்பைஜான் படைகளுடனான மோதல்களில் 26 பிரிவினைவாத ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்’

இதேவேளை, அஸார்பைஜானில் ஒன்பது பேரும், ஆர்மேனியாவில் இரண்டு பேரும் என 11 பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் மொத்தமாக இம்மோதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95ஆகக் காணப்படுகின்றது.

இந்நிலையில், இம்மோதல்கள் தொடர்பாக அட்டவணையில் உள்ளடக்குமாறு பிரான்ஸ், ஜேர்மனி வலியுறுத்திய நிலையில் மூடிய கதவுகளுக்கு மத்தியில் இன்றிரவு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை அவசர பேச்சுக்களை நடாத்தவுள்ளது.

இதேவேளை, மோதலை நிறுத்துமாறு உலகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தீவிரமான மோதல்கள் நேற்று முழுவதும் தொடர்ந்ததாக ஆர்மேனியத் தலைநகர் யெரெவன், அஸார்பைஜான் தலைநகர் பகுவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கரபாஹ் முன்னரங்கின் தென், வடகிழக்கு பகுதிகளில் பாரிய வலிந்த தாக்குதலொன்றை நேற்று மாலை அஸார்பைஜான் படைகள் ஆரம்பித்ததாக ஆர்மேனிய பாதுகாப்பமைச்சின் பேச்சாளர் அர்ட்ஸ்ருண் ஹொவ்ஹன்னிஸ்யன் தெரிவித்துள்ளார்.