ஆட்டம் ஆரம்பம் அது உதை பந்தாட்ட திருவிழாவாக……

அதிகமாக கண்டனத்திற்கு உள்ளாகப்பட்டது கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டவர்கள் மீதான மனித உரிமை மீறல்தான். ஓய்வு இன்றி கடும் வெப்பமான சூழலில் குறைவான ஊதியத்தை வழங்கி செயற்பட்ட இந்த செயற்பாடுகளில் வறிய ஆசிய, ஆபிரிக்க தொழிலாளர்கள் பலர் தமது உயிர் வரை தியாகம் செய்துள்ளனர்.

இந்த இறப்புக்கள் பற்றி கார்டியன் பத்திரிகை 2013 இல் இவ்வாறு கூறியது….

‘மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 4,000 தொழிலாளர்கள் வரை பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களால் இறக்கக்கூடும் என்று கார்டியன் மதிப்பிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 522 நேபாள தொழிலாளர்கள் மற்றும் 700க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் இறந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 250 இந்தியத் தொழிலாளர்கள் இறக்கின்றனர். கத்தாரில் அரை மில்லியன் இந்தியத் தொழிலாளர்கள் இருப்பதால், இது சாதாரண இறப்பு எண்ணிக்கை என்று இந்திய அரசாங்கம் கூறியது.

ஆனால் இவை ஏதும் காதில் வாங்கிக் கொள்ளப்படவில்லை…

பெண்களுக்கு எதிரான பாகுபாடும் இங்கு விமர்சிக்கப்பட்டது. கட்டாரில் உள்ள பெண்கள் விவாகரத்து பெற்றிருந்தாலும், திருமணம் செய்ய, அரசு உதவித் தொகையில் வெளிநாட்டில் படிக்க, பல அரசு வேலைகளில், வெளிநாடுகளுக்குச் செல்ல, சில வகையான இனப்பெருக்க சுகாதாரத் தேவைகளைப் பெற, குழந்தைகளின் முதன்மை பாதுகாவலராகச் செயல்பட தனது ஆண் துணையிடம் அனுமதி பெற வேண்டும் என்பதாக அமையும் ஆண் மேலாதிக்கச் செயற்பாடும் ஆகும்.

இது வரை நடைபெற்ற குழு நிலைப் போட்டிகளில் அதிர்ச்சி தரும் முடிவுகளாக ஆஜன்ரீனா சவூதிஅரேபியாவிடம் தோற்றதும் ஜேர்மனி ஜப்பானிடம் தோற்றதுமாக அமைகின்றது..இ முடிவுகள்

உலகில் அதிகம் நேசிக்கப்படும் அணியான ஆஜன்ரீனாவின் தோல்வி உதைபந்தாட்ட ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் வேளை ஐரோப்பிய உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு ஜேர்மனியின் தோல்வி ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது.

இனிவரும் நாட்கள் எவ்வாறு நடைபெறும் என்பதை பார்ப்பதற்கு எல்லோரைப் போலவும் நானும் காத்திருக்கின்றேன்

மதுப் பிரியர்கள் தாம் விரும்பியபடி மது அருந்தியபடி உதைபந்தாட்டத்தை பார்ப்பதற்கு கிடைக்கப்பெறாக ‘அனுமதி’யும் பலராலும் கிலாகிக்கப்படுகின்றது.

கூடவே இஸ்ரேல் ரசிகர்கள் பாதுகாப்பாக ‘மரியாதையாக’ தமது காலாச்சார உணவுகளை உட்கொண்டு ரசிகர்களாக உதைபந்தாட்டத்தை பார்ப்பதற்கு போதிய வசதிகள் செய்யப்படாதது என்ற ‘ஏமாற்றம்’ உலக அரங்கில் அரசியலாக்கப்பட்டும் இருக்கின்றது.

உலகக் கோப்பையில் தேசிய அணிகள் பங்கேற்க பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு தடை விதிப்பது அரிது. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உக்ரேன் ரஷ்யா யுத்தத்தை காரணம் காட்டி ரஷ்யாவை போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் ரஷ்யா இந்த உலகக் கோப்பை உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளமுடியாமல் போனது. இந்த நேட்டோ அரசியலையும் நாம் பேசித்தான் ஆக வேண்டும். உதை பந்தாட்டம் என்ற திருவிழாவை தொடர்ந்தும் அவதானிப்போம்…..