ஆறுமுகம் திட்டம் மீண்டும் வருகிறது

இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ். மாவட்டத்துக்கான நன்னீரை பெறறுக்கொள்ளுகின்ற ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், நேற்று (13) இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.