’இந்தியாவைத் தவிர எவரும் உதவத் தயாரில்லை’

உணவு, மருந்து பொருட்கள், உரம் ஆகியவற்றை கொள்வனவு செய்ய வெளிநாடுகள் உதவி கிடைத்தாலும், எரிபொருள், நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்ய இந்தியாவை தவிர வேறு எந்த நாடும்  இலங்கைக்கு உதவத்  தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நிலைமையில் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கு இந்தியாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதாகவும் சபையில் தெரிவித்திருந்தார்.