இந்தியா முற்றாக மறுத்தது

இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட எந்தவொரு கடனுதவி திட்டங்களின்கீழும் நீர்த்தாரை வாகனங்களெதுவும் இந்தியாவால் விநியோகிக்கப்பட்டிருக்கவில்லை.

 தற்போதைய சூழலில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசியப்பொருட்கள் போன்றவற்றிற்காகவே ஒரு பில்லியன் அமெரிக்கடொலர் கடனுதவி வழங்கப்பட்டது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கு இவ்வாறான தவறான அறிக்கைகள் எந்தவிதமான ஆக்கபூர்வமான பங்களிப்பையும் வழங்கப்போவதில்லை என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.