’இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இலங்கை மீறுகிறது’

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தம், 1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும் இடையே ஜுலை 29, 1987ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகுமென்றார்.

இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தின்படி, நிலத்தை விநியோகிக்கும் அதிகாரம் வட மாகாணத்துக்கு தான் உள்ளதெனத் தெரிவித்த அவர், வட மாகாணத்திலிருந்து சிங்களவருக்கு எந்த நிலங்களையும் விநியோகிக்க இலங்கைக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் இது சர்வதேச ஒப்பந்தத்தின் மொத்த மீறலாகுமெனவும் கூறினார்.

தமிழரின் விருப்பத்துக்கு எதிராக என்ன செய்தாலும் அது சர்வதேச சமூகத்தால் மாற்றப்படுமெனவும், அவர் கூறினார்.எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் தமிழருக்கு அரசியல் தீர்வைக் காணும் வரை அரசாங்கம் காத்திருக்க வேண்டியது நல்லதெவும், அவர் தெரிவித்தார்.