
வம்சம் அழிந்துபோகும் என்று வருத்தப்படுகிறார் ஒருவர். வரலாறு தெரியாதுபோகும் என்று வருந்துகிறார் ஒருவர்.பண்பாடு என்னாவது என்று பதறுகிறார் ஒருவர். பாரம்பரியம் பொன்னானது என்று பாடுகிறார் ஒருவர். ஆண்களின் அடையாளம் அழிந்துபோகும் என்று அலறுகிறார் ஒருவர். பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாததால், வாழ்வே கேள்விக்குறியான பிள்ளைகளைப் பற்றி அறியார் எவரும். பெண் உரிமை என்று வாய்கிழியப் பேசுவோரும் வம்சமென்று வந்துவிட்டால், வாய் மூடி மௌனம் காப்பர். இன்றைய சமூக, விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ற மாற்றம் வரவேற்புக்குரியது.