குற்றப்புலனாய்வு பிரிவினரின் மற்றொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனியபாரதியை ஞாயிற்றுக் கிழமை (06) அதிகாலை கைது செய்துள்ளனர்.
குறித்த கைது தொடர்பாக அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தனது முகப்புத்தகத்தில் உறுதிப்படுத்தி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த தகவலுக்கமைய கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் வைத்து வீட்டுக்குள் மறைந்திருந்தவேளை இனியபாரதி புலனாய்வுபிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கைதானது இனியபாரதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் இளைஞர், யுவதிகளை கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கலாக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு படுகொலை தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனியபாரதி திருக்கோவில் பகுதியைச் சேர்ந்தவனல்ல, ஆனால் இப்போது அப்பகுதியில் வாழ்பவன், சிங்கள மனைவிக்கு ஒரு ஆண் மகன் இருக்கின்றான். வயது 20 ஐக் கடந்திருக்கும், அவர்களை விட்டுப் பிரிந்து திருக்கோவிலில் ஒரு ஏழைப் பெண்ணைக் காதலித்து அவளை ஏமாற்றி விட்டு தனது நண்பனின் மனைவியை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு தம்பிலுவில் முனையக்காடு பகுதியில் வாழ்கின்றான்.
தேசமான்ய விருது மட்டுமல்ல டாக்டர் பட்டமும் அவனுக்கு மஹிந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இவனைத் தீர விசாரித்தால் விடுதலைப் புலிகளால் 2003ம் ஆண்டுக்கு முன்னர் செய்யப்பட்ட பல கொலைகள் பற்றிய விபரங்கள் தெரியவரும், ஏனென்றால் இவனும் அன்று செய்த வேலையையே விடுதலைப் புலிகளை விட்டுப் பிரிந்த பின்பும் செய்து வந்தான்.