இலங்கைக்கு நிபந்தனை விதித்த ஏரோஃப்ளோட்

இலங்கைக்கு வருகைதரும் விமானங்களுக்கு தடையின்றி விமான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருளை பெற முடியாமல் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வேறு இடத்துக்கு செல்ல வேண்டி ஏற்பட்டால், அதற்கான செலவை இலங்கை அரசாங்கமே செலுத்த வேண்டும் என அந்த நிறுவனம் நிபந்தனையில் வலியுறுத்தியுள்ளது.