இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் சுற்றித் திரிந்த இலங்கையர்கள் மூவரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர். அப்போது அவர்கள் இலங்கை பேசாளை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.