இலங்கையிற்கு கடன வழங்கலில்: சீனாவை விஞ்சிய இந்தியா

2017 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் இலங்கைக்கு அதிகளவான இருதரப்பு கடன் வழங்குநராக சீனா காணப்பட்டதுடன், குறித்த காலகட்டத்தில் இலங்கைக்கு 947 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக்கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டில் இந்தியாவே அதிக கடன்களை வழங்கியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பலதரப்பு கடன் வழங்குநராக ஆசிய அபிவிருத்தி வங்கியே கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கியுள்ளதாகவும் 610 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.