இலங்கை – இத்தாலி இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (04) கொழும்பில் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி மற்றும் இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்றது.