இலங்கை: கொரனா செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள இந்தக் காலப்பகுதியில் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி வளச்சுறண்டல்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய வருகை என்பன இடம்பெறுவதாக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவ்வாறு பயணக்காட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும,; அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், தற்போதுள்ள கொவிட் -19 அசாதாரண நிலைகாரணமாக நாட்டின் சகல பகுதிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றார்.