இலங்கை: கொரனா செய்திகள்

யாழ்ப்பாணம் – கரணவாய் கிராமசேவகர் பிரிவிலுள்ள பகுதியொன்று, இன்று (25) அதிகாலை முதல் முடக்கப்பட்டுள்ளது கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜே- 350 கரணவாய் கிராமசேவகர் பிரிவில் ஒரு பகுதி முடக்கப்பட்டது. அங்கு, சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அக்கிராமும் முடக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை, நாரஹேன்பிட்டிய மற்றும் கொம்பத்தெரு ஆகிய பிரதேசங்களிலேயே புதிய வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். வெள்ளவத்தையில் 58 பேரும், கொம்பத்தெருவில் 23 பேரும், நாரஹேன்பிட்டியவில் 21 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். இன்றுகாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 318 பேர் இனங்காணப்பட்டனர்.