இலங்கை: கொரனா செய்திகள்

கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனாவின் டெல்டா வைரஸ் திரிபு தற்போது வட  மாகாணத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதி சுகாதார சேவை பணிப்பாளருமான விசேட வைத்திய நிபுணர் ​ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.