இலங்கை: கொரனா செய்திகள்

இந்தியாவில் இருந்து 100  மெற்றிக் தொன் ஒட்சிசனை சுமந்து தனது பயணத்தை தொடங்கிய இந்திய கடற்படைக் கப்பலான சக்தி, இன்று (22) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது என்று கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 100 மெற்றிக் தொன் திரவ ஒட்சிசனுடன் கடந்த 19 ஆம் திகதி புறப்பட்ட கப்பல், இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதேவேளை, 39 மெற்றிக் தொன் ஒட்சிசனைக் கொண்டுவரும் இலங்கை கடற்படையின் சக்தி கப்பலும் தீவை நெருங்குகிறது என்றும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.