இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தடுப்பூசி பெறாத 20 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒன்றுகூடலில் இருந்தும் பொது இடங்களுக்குச் செல்வதிலிருந்தும் அரசாங்கத்தால் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 20 வயதுக்கு மேற்பட்டவர்கள், தத்தமது சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் வழங்கும் மையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

40 சுகாதார தொழிற்சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இன்று (22) நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா விசேட கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமை, சுகாதார ஊழியர்களுக்கு தேவையான போதியளவு உபகரணங்களை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அகில இலங்கை சுகாதார சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த குருகே தெரிவித்துள்ளார்.