பதினொரு மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்ட மண்சரிவு சிவப்பு அறிவிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது அதன்படி, பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்ட மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் மேலும் நீட்டிக்கப்படுவதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.