இஸ்ரேல் மீது தடை விதிக்கவுள்ள பெல்ஜியம்

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இம்மாதம் பலஸ்தீன அரசை பெல்ஜியம் அங்கிகரிக்கவுள்ளதாகவும், இஸ்ரேலிய அரசாங்கம் மீது உறுதியான தடைகள் விதிக்கப்படுமென அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மக்ஸிமெ பிறிவொட் இன்று எக்ஸில் அறிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்புகளிலிருந்தான இறக்குமதிப் பொருள்கள் மீதான தடை உள்ளடங்கலான 12 உறுதியான தடைகளை பெல்ஜியம் விதிக்கவுள்ளதாக பிறிவொட் கூறியுள்ளார்.