லொர்டெகன் நகரத்தில் ஆயுதந்தரித்த தனிநபர்களால் இரண்டு பொலிஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பார்ஸ் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் செய்தி முகவரகத்தின்படி ஆர்ப்பாட்டங்களானவை 31 மாகாணங்களிலுள்ள 111 நகரங்களுக்கு பரவியுள்ளதுடன், குறைந்தது 34 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதுடன், நான்கு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதுடன், 2,200 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.