‘ஈரான் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது’

ஈரான் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 500-ஐத் தாண்டியுள்ளதாக ஐ. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட எச்.ஆர்.என்.ஏ ஞாயிற்றுக்கிழமை (11) தெரிவித்துள்ளது. இரண்டு வார ஆர்ப்பாட்டங்களில் 490 ஆர்ப்பாட்டக்காரர்களும், 48 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்ததோடு, 10,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.