ஈரான் – இஸ்ரேல் போர் : இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை அடுத்து குறித்த பிராந்தியத்தில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், அருகிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுவதாக அருண் ஹேமசந்திரா குறிப்பிட்டுள்ளார்.  இந்த விடயங்கள் தொடர்பில் பிரதியமைச்சர் தமது பேஸ்புக் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.