ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையன் காலமானார்

யாழ்ப்பாணம் நீர்வேலியில் பிறந்த இவர்,தன்னுடைய தொடக்க கல்வியை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் கற்று பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டம் பெற்றார்.

கடந்த 24 ஆம் திகதி தன்னுடைய 90 ஆவது அகவையை பூர்த்திசெய்த அன்னாரின் இழப்பு ஈழத்து இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.