உக்ரேனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் கண்ணீர்

“போர் சூழல் எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது” என, உக்ரேனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் தெரிவித்தனர். உக்ரேன் – ரஷ்யா போரால், பிற நாடுகளை சேர்ந்தவர்கள், அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சென்னை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 43 மாணவர்கள், நேற்று முன்தினம் (01) சென்னை வந்தடைந்தனர்.